அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனன் கைது!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அக்காவின் கணவரை கோடாரியால் வெட்டிய மைத்துனனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவெவ-டி-06 பகுதியைச் சேர்ந்த 36வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-மொரவெவ ,பம்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த கே.சரத்குமார்  (40 வயது) தனது அக்காவை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இதேநேரம் இன்று காலை இவர் வீட்டுக்கு வந்து முரண்பாட்டில் ஈடுபட்டபோது கோடாரியால் வெட்டியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவர் கோடாரி வெட்டுக்கு இலக்கான நிலையில் வலது கையில் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை வெட்டிய மைத்துனனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் இதனையடுத்து மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.