வாழைச்சேனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (23) மாலை மரணமடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் ஹேரத் (வயது 35) என்பவரே மரணமடைந்துள்ளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறையில் தனது ஊரான குருணாகல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தமடு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.