எல்லை மீறிய மீன்பிடியால் பாதிக்கப்படுவது இருதேசங்களிலும் ஒரு இனம்

ல்லை மீறி மீன்பிடி தொழிலை மேற்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய தமிழக மீனவர்களும் இதனால் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் இலங்கை தமிழ் மீனவர்கள் இரு தேசங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் ஒரே இனத்தவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர்   அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறிப்பிடுகையில்
வட கிழக்கு பிராந்தியங்களில் கடற்றொழிலை நம்பியே கூடுதலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் . அதனடிப்படையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறும் செயல் அவை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
எமது நேச நாடு இந்தியா எமது ஒரு சமூகத்திற்குள் முரண்பாடு ஏற்படாத வண்ணம் அரசுகள் எல்லை மீறும் மீனவர்களை கைது செய்து இந்திய அரசுடன் ஒப்படைக்க வேண்டும் . அத்துடன் வடபுல மீனவர்களின் தொழில் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மாறாக உயிர் சேதம் நிகழாவண்ணம் பாதுக்காக்க பட வேண்டியது கட்டாயம்.  இலங்கை கடற்படையினரின் படகில் மோதுண்டு நான்கு மீனவர்கள் இறந்த விடையம் மென்பது வேதனையானது.
எமது இலங்கை தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் எழும்போதெல்லாம் குரல் கொடுப்பவர்கள் தமிழக மீனவ சமூதாயமே . இரு தேசங்களிலும் வாழும் ஒரு இனத்தை கடந்த காலங்களில் மோதல்களை உருவாக்கிய வரலாறுகளும் உண்டு. 1964 உருவாக்கப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் சரியாக கையாளப்பட்டால் எந்த ஒரு பிரச்சினைகளும் எழாது. சரியான எல்லைகள் வகுக்கப்பட்டால் பிரச்சினைகள் ஏற்படமாட்டாது என இங்கு சுட்டிக்காட்டினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.