ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலை;ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இன்றுடன் அவர் தண்டனை முடிவடைகிறது. இதனை அடுத்து அவர் இன்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து விடுதலையாவதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவந்தது.
ஆம், சிறை தலைமை கண்காணிப்பாளர் சேசவ் மூர்த்தி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் சிறையில் இருந்து காலை 9 மணியவில் விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்று சசிகலா விடுதலைப் பணிகளை முறைப்படி மேற்கொண்டனர்.
மருத்துவமனை சிகிச்சையில் இருந்த சசிகலாவிடம் கோப்புகளில் கையெப்பம் பெறப்பட்டு விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த சசிகலா ஆதரவாளர்கள் ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.