உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நோக்கில் கருவேப்பங்கேணியில் புதிய பொதுச் சந்தை..
உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், உள்ளூர் உற்பத்திகளையும் சந்தைப்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு மாநகர சபையினால் கருவேப்பங்கேணி பிரதேசத்தில் புதிய பொதுச் சந்தையானது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
6ஆம் வட்டார உறுப்பினர் வே.தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு மாநகர சபையின் அங்கிகாரத்துடன் கருவேப்பங்கேணி புதிய எல்லை வீதியில் உள்ள மாநகர சபையின் காணியில் இப்பொதுச் சந்தையானது அமைக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நோக்கில் அங்குள்ள இறுதிக்கட்ட வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை இன்று (27) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர் த.இராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கருவேப்பங்கேணி பிரதேசத்தினை அண்டியுள்ள பொது மக்களினதும், வியாபாரிகளினதும் நன்மை கருதியும் மட்டக்களப்பு மாநகர சபையின் வளங்களை பயன்படுத்தி இப்போதுச் சந்தையினை அமைத்து வருவதாகவும், இதன் ஊடாக உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதோடு, உள்ளூர் உற்பத்திகளையும் சந்தைப்படுத்த முடியும் எனவும் மாநகர முதல்வர் கருத்து தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை