இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டார் 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா
ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து
பெற்றுக் கொண்டார்

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதனை இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்

 

5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I – 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35
மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு

மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு வைத்தியசாலையில் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.