நாட்டில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் 2,280க்கும் அதிகமான முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra – Zeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் இந்நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra – Zeneca) தடுப்பூசியை இந்நாட்டு மக்களுக்கு செலுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தை சேர்ந்த 8 வைத்தியசாலைகளில் சுகாதார பிரிவினருக்கும் மற்றும் பாதுகாப்பு பிரினருக்கும் குறித்த தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.