ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்!

இலங்கையில் கொவிட்-19 கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மீறாவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கொவிட்-19  தடுப்பூசி ஏற்றப்பட்டது.

ஓட்டமாவடி பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சுகாதார துறை உத்தியோகத்தர்கள் நாற்பத்து நான்கு (44) பேருக்கு கொவிட்-19 கான தடுப்பூசி மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் வைத்து ஏற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.