மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் மெதிரிகிரிய, தஹம்வெவ பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பயிர்செய்கை நிலத்தில் பாதுகாப்பிற்காக நபரொருவரால் போடப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் இன்று அதிகாலை சிக்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கவுடுல்ல வனப்பகுதியை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்ட யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த காட்டு யானைகள் இரண்டின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.