கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வீடுகள் கையளிப்பு

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம்’ எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 2020 திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பளைப் பிரதேசத்தில் 2 வீடுகளும், கிளிநொச்சியில் 1 வீடு ஆகியன நேற்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இதன்போது கிளிநொச்சி பச்சிளைப்ள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சோரம்பற்று கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினை கையளித்து விட்டு திரும்பிய இதன் போது அக்கிராமத்தில் உள்ள சோரம்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமது பாடசாலை மைதானத்தினை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.