மியான்மரில் அவசரநிலை பிரகடனம்: இராணுவம் அதிரடி அறிவிப்பு!

மியான்மரில் திடீரென இராணுவ புரட்சி ஏற்பட்டதாகவும் அந்நாட்டின் முக்கிய அதிகார தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்பட பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மியான்மரில் ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் என அந்நாட்டின் இராணுவம் அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மியான்மரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.