முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர் உட்பட முஸ்லிம் சமுகத்தினர் அணிதிரள்வு!

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் மக்களிடமும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர், மக்கள் காங்கிரஸ் முன்னாள் அட்டாளைச்சேனை தவிசாளர் அன்ஷில் உள்ளிட்ட  முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.