கிழக்கு மாகாணத்தில் வகைப்படுத்தப்படாத குப்பைகளை மார்ச் முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளக்கூடாது-மாகாண ஆளுநர்

(எப்.முபாரக் )
கிழக்கு மாகாணத்தில் வகைப்படுத்தப்படாத குப்பைகளை மார்ச் முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் தலைமையில் கீழ் நடைபெற்ற இன்று(3) விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தெரிவிக்குமாறு ஆளுநர் மாகாண சபைகளின் அமைச்சின் செயலாளர் யூ. எல்.ஏ அஸீஸுக்கு அறிவுறுத்தினார்.
உள்ளூராட்சி மன்றங்களால் வகைப்படுத்தப்படாத குப்பைகளை சேகரிப்பதன் காரணமாக மாகாணத்தில் பல சுகாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன
குப்பைகளை முறையாக வெளியேற்றாததால் காட்டு யானைகளின் பிரச்சினை அதிகரித்துள்ளமையும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே  அழிந்து போகக் கூடிய மற்றும் அழியாத இரண்டையும் தனித்தனியாக சேகரிக்க உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு உத்தரவிடுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் இந்த முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ஆளுநர் மேலும் கூறினார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அமைச்சின் செயலாளர் மதானாயகே, மாகாணத்தின் உள்ளாட்சி நிர்வாக ஆணையர்கள் முதலமைச்சின் செயலாளர் யூ. எல்.ஏ அஸீஸ், உள்ளூராட்சி உதவி ஆணையர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.