இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்

(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகள் அற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்கு முறைகளுடனான சவால்கள் நீங்கி
எமது தாய் நாடு என்ற அடிப்படையில் சுபீட்சமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
இலங்கையின் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மைகள் பல்வேறு கஸ்டங்களை தமது மத கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பதற்கும் இருப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு கோணங்களில் வீதிக்கிறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது.
ஆனால் இவற்றுக்கு முழுக் காரணம்  ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களே தவிர எமது தாய் நாடல்ல. நாம் எல்லோரும் இலங்கை தாயின் மக்கள் என்ற அடிப்படையில் நாட்டை நேசிக்கின்றவர்களாக  மாற வேண்டும். ஆட்சியாளர்களின் அரசியல் இருப்பிற்காக செயற்படுகின்ற இந்த அறியாயங்கள் நீங்கி முழு சுபீட்சமுள்ள நாடாக எமது தாய்த்திருநாடு மாற பிரார்த்திப்போமாக.
நாட்டை நேசிக்கின்றவர்களாக அனைவரும் தமிழ் பேசும்  மக்கள் அனைவரும் மாற வேண்டும். எமது பிரச்சினைகளை முன்னிறுத்தி நாட்டை நேசிக்காதவர்களாக நாம் மாறக்கூடாது. தேசிய தினத்தை சிறப்பாக அனுஸ்டித்து நாமும் தேசிய இனமே என்பதை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் பேசும் சமூகங்கள் காட்ட முனைவோம் என்றும் அவ் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.