கல்முனை மாநகர சபையினால் ன் 73வது சுதந்திர தின விழா

(எம்.என்.எம்.அப்ராஸ் ,சர்ஜுன் லாபீர்)

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின விழா கல்முனை மாநகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இன்று(4) கல்முனை வாசல் சந்தியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின்  ஆசியுரை, அதிதிகளின் உரைகள் என்பன இடம்பெற்றன.

மேலும் இந் நிகழ்வில் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், மாநகர சபை ஆணையாளர்,பிரதி ஆணையாளர்,பொறியியலாளர், கணக்காளர், பிரதம வைத்திய அதிகாரி,மும் மதத் தலைவர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.