எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர்-சுமந்திரன்

(சந்திரன் குமணன்)

 

எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் சமூகத்தை பிரித்து ஆளுகின்றனர் என  தமிழ் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாங்களும் இந்த நாட்டின் மக்கள் தமிழ் பேசுகின்ற இஸ்லாமியர்களும் இந்த நாட்டு மக்கள் நாங்கள் இந்த நாட்டில் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக பேரினவாதத்தை மேலோங்க செய்து தாங்கள் நினைத்தபடி 73 வருடங்களாக
ஆட்சி செய்திருக்கிறார்கள்.

அப்படி செய்கின்போது எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்றவனர்களை பிரித்து ஆழுகிகின்றார்கள் அப்படி இனி நடக்க கூடாது .

தமிழ் பேசும் சமூங்களாக வடக்கு கிழக்கை தாயமாக கொண்ட வட கிழக்கு வெளியே வாழுகின்ற இஸ்லாமிய மக்களும் மலையகத்தில் வாழுகின்ற எமது தமிழ் உறவுகளும் ஒன்றினைந்த மக்களாக இணைந்து பேரணியில் பயணிக்க வேண்டும் இந்த நடைபயணம் எமது ஒற்றுமைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்திருக்கின்றது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.