பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைபேரணி ; யாழில் விழிப்புணர்வு நடவடிக்கைகள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை எடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

மருதனார்மடம் சந்தையில் இன்று(06) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்ப்பாணம் குடாநாட்டில் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்டோர் இந்த விழிப்பூட்டல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழ்பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கடந்த 3ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகி 4ஆம் நாளான இன்று வவுனியாவில் ஆரம்பமாகி மன்னார் பயணிக்கிறது.
இந்தப் போராட்டம் மக்களின் பேரெழுச்சியுடன் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.