இரண்டு பிள்ளைகளும் இல்லை கொள்ளிவைக்க பிள்ளைகளும் இல்லை- கதறியழுதனர் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள்

இரண்டு பிள்ளைகளும் இல்லை கொள்ளிவைக்க பிள்ளைகளும் இல்லை- கதறியழுதனர் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான எழுச்சிபேரணி இன்று வவுனியா நகரிலிருந்து புறப்பட்டவேளை பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறியழுது தங்கள் வேதனையை வெளியிட்டனர். எங்கே உறவுகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை விடுதலை செய் என அவர்கள் கதறினார். தனது இரண்டு பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தாய் ஒருவர் கதறினார். இரண்டு பிள்ளைகளும் இல்லை கொள்ளிவைக்க பிள்ளைகளும் இல்லை என அந்த தாய் கதறினார். 2008 ஆறாம் திகதி 28 ம் திகதி தனது மகன்மகன் கடத்தப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.