தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் அச்சுறுத்தப்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் – பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை புகைப்படம் எடுத்து இலங்கை இராணுவம் அச்சுறுத்தல்

இலங்கையில் தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் சிறுபான்மை இனங்களின் பூர்விக இடங்களை தொல்லியல் திணைக்களம் அகழ்வாராட்சி எனும் நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் பௌத்த மயமாக்களை மேற்கொள்வதற்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை இனங்களின் பல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ் பேசும் மற்றும் தமிழ் தேசிய கொள்கையில் ஒருமித்து பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இலங்கையின் கோட்டாபய அரசுக்கும் சர்வதேசங்களுக்கும்  அழுத்தத்தை கொடுக்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி நடாத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் இணைந்து  செயற்படும் பாராளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை இராணுவம் புகைப்படங்கள் எடுத்து  அதனை ஆவணப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான  பேரணியின் போதும்
இலங்கை இராணுவத்தினால் தமிழ் தேசியம் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஜனநாயக ரீதியில் போராடும் சிறுபான்மை இனங்களையும் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளினையும் இலங்கையின் கோட்டபாய அரசாங்கம் இலங்கை இராணுவத்தை வைத்து அச்சுறுத்தி வருகிறமையை சர்வதேச நாடுகளுக்கு கொண்டுபோய் சேர்த்து அழுத்தத்தை கொடுத்து  இலங்கையில் சிறுபான்மை இனம் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதே இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் எதிர்பார்ப்பாகும் ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.