ஐந்தாம் நாளில் உரிமைக்கான போராட்டம் உணர்வெழுச்சியுடன் தொடர்கிறது

(சந்திரன் குமணன்)

பல தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையையும் தகர்த்து தமிழ்த் தேசியத்தைக் காக்கும் உரிமைப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று(07) கிளிநொச்சியில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம்  பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே எம்மை நிம்மதியாக வாழ விடு , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் எனும் விண்ணதிரும் கோசங்களோடு மக்கள் அலை வெள்ளமாய் பரந்தன் நோக்கி நகர்கின்றது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர். இது வரை 7 மாவட்டங்களை கடந்து தற்போது  யாழ் மண்ணை அடைவதற்கான பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.