கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 245 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர கம்பஹா மாவட்டத்தில் 214 பேருக்கும் இரத்தினப்புரியில் 53 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 260 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இலங்கையில் மொத்தமாக 772  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.