வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு

யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு இடையில் இடம்பெற்றது.

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இன்று (08)இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் , வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து எவ்வாறான வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முடிவும் மற்றும்  அதற்குறிய ஆலோசனைகள் , வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கான இலவச பயிற்சி நெறிகளை இந்தியாவிற்கு சென்று மேற்கொள்ளுவதற்கான புலமைப்பரிசையில்களை வர்த்தக சங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளல் ,  வர்த்தகர்கள் நலன் சார் பல்வேறு திட்டங்களை முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இவ் கலந்துரையாடலின் யாழ்.இந்திய துணைத்தூதுவரின் பிரதிநிதிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.