யாழ் கல்வியங்காட்டில் நள்ளிரவில் கைவரிசையை காட்டிய இனந்தெரியாத திருட்டு கும்பல்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு வேளாதோப்பு வீதி   வீட்டொன்றில் இன்று (08) திங்கட்கிழமை நள்ளிரவு  இனந்தெரியாத திருட்டு கும்பலால் பெறுமதிமிக்க வளர்ப்பு பிராணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு வேளாதோப்பு வீதியிலுள்ள செங்குந்தா பொதுச்சந்தை மரக்கறி வியாபாரி  பத்மநாதன் சாந்தரூபன் என்பவரின் வீட்டில் நேற்று    (08) திங்கட்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத திருட்டு கும்பலால் பெறுமதிமிக்க வளர்ப்பு பிராணிகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்ற அருகிலுள்ள யாரும் அற்ற பக்கத்து வீட்டிற்குள் சென்று அவ்வீட்டில் இருந்த வானொலிப்பெட்டியையும் வெறும் காணியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு இன்று வருகை தந்த கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
வீட்டின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.