பூநகரி பொலிசாரால் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
பூநகரி பொலிசாரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி பொலிஸ் விசேட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனாய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை