அதி சக்தி வாய்ந்த மின் கம்பமொன்றில் கார் மோதி தீப்பிடிப்பு !

குருணாகலை- ரம்புக்கன பிரதான வீதியில் கட்டுவாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு கார் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த கார் வீதியிலிருந்து விலகி அங்கிருந்த அதி சக்தி வாய்ந்த மின் கம்பமொன்றில் மோதி தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தால் மகிழுந்து முற்றிலுமாக எரிந்துள்ளதுடன், மின் கம்பமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்து நிகழ்ந்த நேரத்தில் மூன்று பேர் மகிழுந்தில் இருந்ததாகவும் அவர்கள் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதகாவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அவர்களில் இருவரை பொத்துஹெர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மற்ற சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.