புன்னக்குடாவில் அமையவிருக்கும் ஆடைக் கைத்தொழில் பூங்காவின் மூலம் சுமார் 8000 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெறுவர்- வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் புன்னக்குடா பகுதியில் அமையவிருக்கும் ஆடைக் கைத்தொழில் பூங்காவின் மூலமாக எமது பிரதேசத்தைச் சார்ந்த சுமார் 8000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சதின்பால் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு புன்னக்குடா பகுதியில் அமையவிருக்கும்ஆடைக் கைத்தொழில் பூங்காவிற்கென 200 ஏக்கர் காணியினை காணி சீர்திருத்த ஆணைக்குழுவினரால் இலங்கை முதலீட்டு சபைக்கு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் க .கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது .

இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டில் கொழும்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் எத்தனையோ கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டு அங்குள்ள இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர் எமது இளைஞர் யுவதிகளும்களும் கொழும்பு மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்லும் நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. புன்னக்குடாவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இத் தொழிற்சாலையானது எமது மாவட்டத்திற்கும் எமது மக்களுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டிற்கு இத் திட்டத்தின் மூலமாக சிறந்த முதலீட்டாளர்களை கொண்டுவந்து சுபீட்சதினை நோக்கி எமது மக்களை பயணிக்க வைப்பதே அவரது நோக்கமாக இருக்கின்றது அதுமாத்திரமின்றி வாகரை ,வெல்லாவெளி பட்டிப்பளை ,வவுணதீவு ,போரதீவுப் பற்று ,மண்முனை தென் எருவில் பற்று ,கிரான் போன்ற பகுதிகளிலும் முதலீட்டாளர்களை வரவளைக்கின்றபோது மேலும் பல்லாயிரக்கணக்கான எமது மாவட்ட இளைஞர் ,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இதற்கான முன்னெடுப்புக்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார் நிகழ்வில் மட்டக்களப்பு திருகோணமலை காணி சீர்திருத்த பணிப்பாளர் எஸ் .விமல்ராஜ் மற்றும் காணி சீர்திருத்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.