ஆசிரியரை தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த தங்க நகை கொள்ளை; தம்பிலுவில் பகுதியில் சம்பவம்

அம்பாறை திருக்கோவில்  பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திங்கட்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில்  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் சம்பவதினமான திங்கட்கிழமை மாலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளர் இந்த நிலையில் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய கணவர் மனைவி தலையில் காயம் எற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.