வியாழேந்திரனின் வழிகாட்டலில் ஆடுகள் வழங்கும் திட்டம்

(ந.குகதர்சன்)

 

பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி,மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்கஅமைச்சர் சதாசிவம்வியாழேந்திரனின் வழிகாட்டலில் குறைந்த வருமானம் பெறும்குடும்பங்களுக்கான ஆடுகள் வழங்கும் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எஸ்.முஸம்மில் தலைமையில் குறைந்த வருமானம் பெறும்குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பதினைந்து குடும்பங்களுக்கு ஆடுகள் இ;ன்று வழங்கிவைக்கப்பட்டது.
உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் மயிலங்கரைச்சைஇணைப்பாளர் எஸ்.கருணா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்குடா செயற்பாட்டாளர்;எம்.சிம்ஸான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.