மன்னார்-எழுமாற்றான பரிசோதனையிலேயே நானாட்டானில் உத்தியோகத்தர்கள் 08 பேருக்கு தொற்றுறுதி!

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பிசிஆர் பரிசோதனையிலேயே உத்தியோகத்தர்கள் எண்மருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நேற்று அடையாளம் காணப்பட்ட 21 நபர்கிளல் 10 பேர் மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் எண்மர், நானாட்டான் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நானாட்டான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மூவர், தனியார் வங்கி (HNB) ஊழியர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய இருவரும் நோய் அறிகுறிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்,

மன்னார் மாவட்டத்தில் பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 35 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த எண்மரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் பிரதேச மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.