மாயமோ இல்லை.. மந்திரமோ இல்லை! உறைப்பனியே காரணம்..!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.
மின்னபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களாகவே மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. மேலும் சாலைகளில் சுமார் 2 அடி உயரத்தில் பனிக்கட்டி உறைந்து கிடக்கிறது.
உறைய வைக்கும் கடுங்குளிரால் தோட்டங்களில் கொடியே கட்டாமல் ஆடைகளை காய வைத்துள்ள நிலையில் அவை பிடிமானம் இல்லாமல் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.