வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் உழவர் சந்தை திறந்து வைப்பு

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களிற்கு போதுமான நியாயமான விலை கிடைக்காமையினாலும், நுகர்வோர்களிற்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்காமையினையும் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிற்கு சேவைவழங்கும் நோக்குடன் குறித்த உழவர்சந்தை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக இன்று (13) திறக்கப்பட்டது.விவசாயிகள் தமது கமநல கேந்திர நிலையங்களினூடாக தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதுடன் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதற்கான ஒழுங்குகளும் இதனூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன மற்றும் ஏனைய விருந்தினர்கள் சந்தையை உத்தியோக பூர்வமாக நாடாவெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்வில் கமநலசேவை நிலைய பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் ந.கமலதாசன், பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.