நாடு முழுவதும் சுற்றிவளைப்பு; 3,880 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதில் 494 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் மற்றும் 60 பொலிஸ் நாய்கள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சோனை நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பல்வேறு குற்றங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.