இரண்டு குழந்தைகளை துாக்கிய குரங்குகள் குளத்தில் வீசியதில் ஒரு சிசு பலி!

வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த, பிறந்து எட்டு நாட்களே ஆன, இரண்டு பச்சிளங் குழந்தைகளை குரங்குகள் துாக்கிச் சென்று குளத்தில் வீசியதில், ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்திய நாட்டில் உள்ள தஞ்சாவூர், மேலஅலங்கம், கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா, 29; பெயின்டர். இவரது மனைவி புவனேஸ்வரி, 26. திருமணமாகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஜீவிதா, 5, என்ற மகள் உள்ளார்.கடந்த, எட்டு நாட்களுக்கு முன், புவனேஸ்வரிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. நேற்று மதியம், புவனேஸ்வரி, வீட்டின் நடுவே குழந்தைகளை உறங்க வைத்து, கழிவறைக்கு சென்றார்.
அப்போது, வீட்டுக்குள் வந்த குரங்குகள், இரண்டு குழந்தைகளையும் துாக்கிச் சென்றுள்ளன. புவனேஸ்வரி வந்து பார்த்தபோது, படுக்கையில் இரண்டு குழந்தைகளும் இல்லாததை கண்டு, அதிர்ச்சி அடைந்தார்.வெளியே சென்று பார்த்தபோது, குரங்கு ஒன்று, கையில் ஒரு குழந்தையை வைத்திருந்துள்ளது.
புவனேஸ்வரி கதறி அழுது கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் கூடி விரட்டியதால், குழந்தையை கூரை மேல் போட்டு, குரங்கு ஓடி விட்டது. அந்த குழந்தை மீட்கப்பட்டது
.மற்றொரு குழந்தையை காணாமல் தேடிய நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்தில் இருந்து, குழந்தையை இறந்த நிலையில் உறவினர்கள் மீட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.