மட்டக்களப்பு-நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி பலி

(ந.குகதர்சன்)

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் இன்று (14)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக வட்டா வாகனத்தின் சாரதி வாகனத்தினை வீதி ஓரத்தில் நிறுத்தி வாகனத்தின் முன் பக்கமாக நின்ற வேளையில் கந்தளாயில் இருந்து நெல் ஏற்றி வந்த லொறி வீதியோரமாக நிறுத்தி வைத்திருந்த சிறியரக வட்டாவில் மோதியதில் சிறியரக வட்டா சாரதியின் மேல் ஏறியதால் சாரதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறியரக வட்டா வாகனத்தின் சாரதியான ஏறாவூர் 02ஐ காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அஹமட் லெப்பை லாபீர் (வயது 61) என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் இரண்டு வாகனங்கள் மற்றும் லொறி சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.