இந்திய தூதரகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா!
இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டு;ள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இலங்கை அரசாங்கத்தின் மருத்துவநிலையமொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களின் படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தவர்களும் உரிய நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளவர் தூதரகத்தின் ஏனையவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பையே பேணினார்,தனது உத்தியோகபூர் நடவடிக்கைகளின் போது வெளியாட்களுடன் தொடர்புகொள்ளவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை