பெரியநீலாவணை பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு: பணிகள் இடைநிறுத்தம்!

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்   ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.

தனியார் தொலைதொடர்பு நிறுவனம் குறித்த பிரதேச மக்களின் அனுமதி இன்றியும் ,சமூக அமைப்புகளின் அனுமதி இன்றியும் கடந்த மூன்று வார காலமாக மக்களின் எதிப்பை மீறி அமைக்கப்பட்டு வந்த தொலை தொடர்பு கோபுர வேலைப்பாடு கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

சம்பவ இடத்திற்கு  கல்முனை மாநகர சபை உறுப்பினர் குபேரன்  வருகை தந்தார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.