பதுளையில் பாடசாலைக்கு முதல்நாள் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (15) காலை இடம்பெற்ற  இந்த விபத்தில் பதுளை- அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் இணைவதற்காக அவருடைய பாட்டி மற்றும் இரட்டை சகோதரருடன் சென்று கொண்டிருந்த வேளையில், கன்டேனர் ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த மாணவனுடைய பாட்டியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.