ஒரு மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே தடுப்பூசியை செலுத்திக்கொள்வேன்” – ஹரின் எம்பி

இலங்கையிலுள்ள குறைந்தது ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே,
தான் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை பதிவொன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்ற நிலையிலேயே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே, தான் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதாகவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.