முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு கசையடி கொடுக்க வேண்டும்!-இம்ரான் மஹ்ருப்

(பாறு க் ஷிஹான் ,நூருல் ஹுதா உமர் )

சகல தவறுகளையும் சந்தர்ப்பங்களில் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை.தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது.எனவே முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் மக்களிடம்   இனியாவது இஸ்லாமிய தண்டனையான  கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி  ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் (16) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

20 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெற்று அதற்கு ஆதரவாக வாக்களித்த பின்னர்   நான்கு மாதங்களின் பின்னர் மன்னிப்பு நாடகம் ஒன்று  அரங்கேறுகிறது. இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அவர்கள் உண்மையான இஸ்லாமிய அரசியலை செய்பவர்களாக இருந்தால் இஸ்லாமிய சரியாவை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர்கள் செய்த வேலைக்கு கசையடி வாங்கிக்கொண்டே ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும்

தேர்தல் காலங்களில் குரானையும்இ ஹதீஸையும் காட்டி தேர்தல் செய்பவர்கள்
தேர்தலின் பின்னர் இஸ்லாமிய நடைமுறைகளை பேணியா அரசியல் செய்கிறார்கள்.மக்களை போன்றே நானும் எங்களின் கட்சியுடன் மிகப்பெரும் ஆதங்கங்களுடன் இருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களின் கட்சியினர் சொந்த கட்சிக்காரர்களை வளர்ப்பதைவிட கொந்தராத்து கட்சிக்காரர்களை வளர்ப்பதையே குறியாக வைத்திருந்தனர். 2015 ஆம் ஆண்டு என்னுடைய மாவட்டத்தில் போட்டியிட்ட மு.கா வேட்பாளரை நான் தோற்கடித்தேன். அவரை எங்கள் கட்சிக்காரர்களே தேசிய பட்டியல் ஆசனம் கொடுத்து எம்.பியாக்கி மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இணைத்தலைவராகவும் நியமித்தார்கள். இது போன்ற அநீதிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் போனதனாலையே புதிய பாதையை உருவாக்கினோம்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது இப்போதுதான் பிறந்துள்ள குழந்தை. அது இன்னும் வளர வேண்டும். நடக்கஇ ஓட இன்னும் காலம் எடுக்கும். எங்களை சம்பந்தமே இல்லாத ஹம்பந்தோட்டைக்கு கட்சிப்பணிக்காக நியமித்தார்கள். மஹிந்தவின் கோட்டைக்குள் சென்று வேலைசெய்ய பயந்தோம். அங்கு நிலை தலைகீழாக இருந்தது. அங்கும் மக்கள் நிறைய மாற்றங்களுடன் எங்களை வரவேற்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால் நிறைய புறக்கணிப்புக்களையும், அவமானங்களையும் சந்தித்தோம். நாங்கள் முஸ்லிங்களுக்கு மட்டுமான எம்.பிக்கள் இல்லை இங்கிருக்கும் எங்களுக்கு சிங்கள மக்களும் தமிழ் மக்களும் நிறைய வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் குரல்கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசிய ஒரே பௌத்த சிங்கள தலைவர் என்றால் அது சஜித் பிரேமதாச மட்டுமே. அவர் பாராளுமன்றத்தில் ஜனாஸா விடயம் தொடர்பில் பேசிய பின்னரே சிறுபான்மை தலைவர்களான ரவூப் ஹக்கீம் போன்றோர் வாய்திறந்தார்கள். கடந்த மாகாண சபை அமர்வுகளில் மதநெகுமவில் கையை உயர்த்த ஆரம்பித்த இவர்கள் இன்றும் அதையே தான் செய்கிறார்கள். இவர்களை தொடர்ந்தும் நம்ப முடியாது. எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் தனித்தே களமிறங்குவோம். இது தொடர்பில் கட்சியின் உயர்பீடத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன். இவர்கள் செய்த காரியத்தினால் பொதுஜன பெரமுன தலைவர் பாராளுமன்றத்தில் பேசும் விடயங்களே பெறுமானம் இல்லாமல் போகியுள்ளது.

இந்த அரசை இயக்குவது ஊடகங்களும் , காவியுடை தரித்த பிக்குகளுமே. நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்தை மக்களாகிய நாம் நம்ப வேண்டும். கடந்த நல்லாட்சி அரசில் வீடமைப்பு அமைச்சராக இருந்து நிறைய சிறுபான்மை மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் மோசமான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு இருந்த நல்ல பெயரையும் அந்த காலத்தில் இழந்துவிட்டோம். அந்த அரசாங்கத்தின் தலைவர் யார் என்பதை இறுதிவரை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

ஆனாலும் இந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் காலங்களில் காதிநீதிமன்றம்இ மதரஸா என்பன சிக்கலில் மாட்டிக்கொள்ள போகின்றது. அவற்றை நாங்கள் சரியாக அணுகி மக்களுக்கு ஆதரவாக செயற்படுவோம். 2015 வரை தோல்வியை மட்டுமே சந்தித்த நாங்கள் இனி தலைதூக்க முடியாது என்றார்கள். அதிகாரத்தில் இருந்த மஹிந்தவை தோற்கடித்து ஆட்சியை உருவாக்கினோம். 2025 யிலும் அதை சாத்தியமாக்குவோம் என்றார்.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர்களான  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  முஜிபுர் ரஹ்மான்  இம்ரான் மஹ்ரூப்  நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியலாளர் அப்துல் ரஹ்மான்இ ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள்இ ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.