அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் கற்றல் விடுமுறை
2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 (இன்று) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை