வவுனியா – கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பம்

வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 தாக்கத்தையடுத்து வவுனியாவிற்கும், கொழும்புக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,  நாடு மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில் போக்குவரத்து பயணிகளின் நன்மை கருதி வவுனியா – கொழும்புக்கு இடையிலான குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொகுசு பஸ்சில் பயணிப்பவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், குறித்த குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவை வவுனியாவில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கும், இரவு 11.30 மணிக்கும் கொழும்பு நோக்கியும், கொழும்பில் இருந்து தினமும் காலை 11 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் வவுனியா நோக்கியும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.