மருதங்கேணி பகுதியில் வீதிகளை சீரமைக்க நடவடிக்கை

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடந்த காலங்களில் காபெற் வீதிகளாக புனரமைக்கப்ட்ட வீதிகள் தற்பொழுது சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதியால் பயணிக்குமு் பிரயாணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கடந்த 3்ம் திகதி இடம்பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அந்த கோரிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கறை எடுத்து விரைந்து புனரமைப்பு பணியில் ஈடுபடுமாறு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு  இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரை செய்திருந்தார். அந்த கோரிக்கைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு புனரமைப்பு பணி தொடர்பில் ஆராய்ந்தார். பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.