கலையரசனின் முயற்சியால் திருக்கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிப்பு…

 

திருக்கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் உட்பட பாடசாலை உபஅதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இத்தனை காலமும் சாதாரண தரம் வரையில் கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட இப்பாடசாலையில் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் முயற்சியின் காரணமாகவும், பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவும் தற்போது உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஆரம்பிக்கப்பட்ட உயர்தர கலைப்பிரிவிற்கான வகுப்பறையும் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.