வவுனியாவில் வீதி விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா இலுப்பையடி சந்தி மரக்கறி சந்திக்கு அருகாமையில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலுப்படிசந்தியில்நேற்று (20) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹோரவப்போத்தானை வீதியுடாக கோழி இறைச்சி சந்தை நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் வீதியில் முன்பாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியதுடன் பட்டா ரக வாகனத்தின் சில் பகுதியில் மோட்டார் சைக்கில் சிக்கிக்குன்டது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.