அம்பாறை பிரதேசங்களில் பழவகைகள் விற்பனை அதிகம்!

அம்பாறை மாவட்டத்தில்    பிரதான வீதியோரங்களில்  உள்ள கடைகளில்     பழங்களை பொது மக்கள் ஆர்வத்துடன்  அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதனால்  அம்பாறை  மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில்  அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

வருடந்தோரும்    பருவ காலங்களில் அரிய வகை   பழங்களின் விற்பனை மும்முரமாக இடம்பெறுகின்றதை காண முடிகின்றது.இவை தவிர ஆஸ்திரேலியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும்   பழ வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில்   மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகள்  விற்பனை செய்யப்படுகின்றன.
குறித்த பழ வகைகளில் மாதுளை, ஒரஞ்சு, ஆப்பிள், பச்சை திராட்சை,  உள்ளிட்ட பல்வேறு பழங்க  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றனர்.கொரோனா அனர்த்த்தின் பின்னர் பழ விற்பனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் தற்போது அதில் இருந்து மீண்டு பழவிற்பனையில்   ஈடுபட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.