அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பணம்

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு இன்று அங்குரார்ப்பணம்
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயற்குழு 21.02.2021 அட்டாளைச்சேனையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி. முபாரக் தலைமையில் சுகாதார முறைப்படி இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் சங்கத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட மீயுயர் பீட உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஆராயப்பட்டதுடன், சங்கத்திற்கான அம்பாரை மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வீ.பற்குணன்,  அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஹபிபுர் ரகுமான், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.அப்துல் ரஹீம், அக்கரைப்பற்று மற்றும் இறக்காம  பிரதேச சபைகளின்  செயலாளரான இர்பான், சங்கத்தின் உதவிச் செயலாளர் பைஸ், சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜாஹிதா ஜலால்டீன், மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் நவநீதன், காத்தான்குடி இணைப்பாளர் சாகிர்,
ஆகியோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாரை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக எஸ்.ஜே.தேவானந்த்,
உதவிச் செயலாளராக என்.சாமில், மாவட்ட ஊடகச் செயலாளராக ஏ.புஆத், பிரதி ஊடகச் செயலாளராக
எம்.எப்.பர்சாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், வலய மற்றும் பிரதேச இணைப்பாளர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.