துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு பூட்டு!

துபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை டுபாய் துணைத் தூதரக வளாகத்தை கிருமி நீக்கம் செய்த பின்னர் அலுவலகம் பொது மக்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடியிருக்கும் இந்த காலத்தில் அவசர நிலைமைகளில் பொதுமக்கள் slcg.dubai@mfa.gov.lk என்ற மின் அஞ்சல் மூலம் துணைத் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.