திருமண நிகழ்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் இனம் காணப்பட்டதை அடுத்து திருமண நிகழ்வுகளில் இந்த தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் மேற்படி மாற்றத்தை சிந்தித்திருந்தனர்.

எனினும் திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இல் இருந்து மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

திருமண நிகழ்வை நம்பி பலரும் உள்ளதால் இது தொடர்பில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றத்தை இடைநிறுத்த தீர்மானிக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.