பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்தச் சந்திப்பு ஆரம்பமானதுடன், இருதரப்புப் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, கொழும்பில் நடைபெறவுள்ள ‘வணிக மற்றும் முதலீட்டு மன்றத்தில் இம்ரான் கான் உரையாற்றவுள்ளார்.

அதன்பின்னர், பாகிஸ்தான் பிரதமர் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷவுடன் மதிய விருந்து உபசாரத்தில் பங்கேற்கவுள்ளதுடன், இலங்கை விஜயத்தை முடிப்பதற்கு முன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்திக்கவுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இலங்கைக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றதுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையில் வர்த்தகம், கல்வி சார்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்நிலையில், இன்று மாலை தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து பயணிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.