இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) முற்பகல் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, ஜெனிவா விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் கட்சிசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இணைவது குறித்தும் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை